ஆறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா !

Spread the love

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா Today Onwards Arupada அழைத்து செல்ல இருப்பதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை.

இந்த திருத்தலங்களுக்கு 200 பக்தர்கள் என ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.

இத்திட்டத்தின் முதற்கட்ட பயணம் வரும் ஜனவரி 28ம் தேதி இன்று முதல் துவங்க உள்ளது .இதற்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து எகனாவே பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த இலவச சுற்றுலாவுக்கு தகுதியுடைய Today Onwards Arupada 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் .

இத்திட்டத்தின் மூலம் தகுதி பெற்ற மற்ற விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும். 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 200 பேர் கட்டணம் இல்லாமல் முழுமையாக 50 லட்சம் ரூபாய் செலவில் அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சோழர்கள் ,பாண்டியர்கள் , பல்லவர்கள், என தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிறந்த கலை நயத்துடன் கட்ட பட்ட கோயில்கள் இன்று கம்பீரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக மக்களால் அதிகம் விரும்பப்படும் இந்த ஆன்மீக சுற்றுலா பயணம் வெற்றிபெற அனைவரும் பிராத்திப்போம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

60 வயதை எட்டியவர்கள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டம் இன்று முதல் ஆரம்பம் ஆகி உள்ள நிலையில் முதற்கட்டமாக 207 பேர் முருகனின் அறுபடை வீடுகளுக்குச் செல்கின்றனர்.

அங்கு தனிநபராக செல்ல 50,000 வரை செலவாகும். ஒரு நபருக்கு 15,830 அரசு செலவு செய்கிறது. இந்த பயணத்திற்கான செலவினை அரசு மானியத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours