ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புத்தாண்டு வாழ்த்து!

Spread the love

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு, புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும்.

இயற்கை சீற்றங்களால் நாம் சந்தித்த இடர்களைக் கடந்து 2024 புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராவோம். அன்பையும் வாழ்த்துக்களையும் அனைவரோடும் பரிமாறிக் கொள்வோம். ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம்.

இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours