சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கடந்த 19-ம் தேதி 2024-25 -ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்றுதாக்கல் செய்தார். 2024-25-ம்ஆண்டின் செலவுக்கான முன்பண மானிய கோரிக்கைள் மீதுவிவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது.
பின்னர், தமிழ்நாடு நிதி ஒதுக்கசட்ட முன்வடிவை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார். இந்த சட்ட முன்வடிவு நேற்றே ஆய்வு செய்து நிறைவேற்றப்பட்டது. இதன்படி, அரசுக்கு துறைகள் வாரியாக கோரியநிதி வழங்கப்பட்டதாக, பேரவைத் தலைவர் அறிவித்தார்.
இதையடுத்து, இன்று பொதுமற்றும் வேளாண் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்துக்கு பதிலளித்து நிதியமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் நாளை உரையாற்றுகின் றனர். அத்துடன் அரசு தீர்மானங் கள், சட்ட முன்வடிவுகளும் நிறைவேற்றப்பட உள்ளன.
+ There are no comments
Add yours