தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது .
உயிரிழந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்தால், இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் .
சொன்னது சொன்னபடி உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது .
இந்நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் கணிசமாக அதிகரித்து வருகிறது.
முன்பு, ஒரு மாதத்திற்கு சுமார் 100 உடல் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் மட்டுமே பெறப்பட்டு வந்த நிலையில்,
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு,உடல் உறுப்பு தானம் பற்றிய மக்களின் எண்ணம் நேர்மறை மாற்றத்தைச் சந்தித்துள்ளது என தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் கடந்த 29 நாட்களில், 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
2024 ஜனவரி 1 முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2008க்கு பிறகு ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 27 பேர், இதயம் 10 பேர், நுரையீரல் 13 பேர் என தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இயலாத சிலருக்கு உறுப்புகளைத் தானமாக வழங்கும் உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம் ஆகும்.
மனித குல சேவைக்காக அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வரவேண்டும் என்றும் இதற்கான விழிப்புணர்வுக்கு அனைவரிடமும் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்புக்கள் செயலிழந்துபோவதாலும், வேறு ஒருவரின் உறுப்புக்கள் கிடைக்காததாலும் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இறக்கின்றனர்.
தேவைப்படும் நபர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே உடல் உறுப்புக்கள் கிடைக்கின்றன. மீதியுள்ள 90 சதவீதம் பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளது சற்று மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது .
+ There are no comments
Add yours