சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வாச்சாத்தி விவகாரத்தில் மக்களுக்கு நியாயம் கேட்டு 30 ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட போராட்டம் நடத்தி வந்த நிலையில் வரலாற்று தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளது.
இந்த வழக்கில் மக்களுக்கு தீர்ப்பு கிடைத்தாலும், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை நடத்திவரும் பாதயாத்திரை மக்களுக்காக நடத்தப்படவில்லை. மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தான் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை புழல் சிறை ஊழல்கள்: விசாரணைக்கு ஆணையிடுக! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக அரசுதான் அனுமதி கேட்ட நிலையில், இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது எனக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், சமீப நாட்களாக கொலைக் கொள்ளை குற்றத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரில் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் கொடுத்தால் தண்டனை பெற்றுக் கொடுப்பார்கள். என்கவுண்டர் கொலை செய்யும் நடவடிக்கை நல்லது இல்லை என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours