நாகை மாவட்டம் வெள்ளை பள்ளம் மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் நடத்த pஉள்ளனர். கத்தி முனையில் வெள்ளி அருணா கயிறு உட்பட 3 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்து சென்றதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் வெள்ளபள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது கணவன் மணியன், வேல்முருகன், சத்யராஜ், அக்கரப்பேட்டையை சேர்ந்த கோடிலிங்கம் ஆகிய நான்கு மீனவர்களும் நேற்று மதியம் வெள்ள பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று இரவு மீன் பிடிப்பதற்காக கடலில் வலை விரித்த போது அங்கு அதிவேக இஞ்சின் பொருத்தப்பட்ட படகில் வந்த மூன்று கடல் கொள்ளையர்கள் வெள்ளப்பள்ளம், அக்கரைப்பேட்டை மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மூன்று லட்சம் மதிப்புள்ள வலைகள் பறித்துக் கொண்டு மீனவர்களை கத்தியால் வெட்டிய இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் இருந்த ஜிபிஎஸ், செல்போன் உள்ளிட்ட மீன் பிடி தளவாட பொருட்களை கொள்ளையடித்த அவர்கள் மீனவர்களை ரப்பர் தடி, கத்தியால் தாக்கி, இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி அருணா கொடியை அறுத்து சென்றனர். காயம்பட்ட அக்கரைப்பேட்டை மீனவர் கோடிலிங்கம், வெள்ளப்பள்ளம் மீனவர் மணியன் உள்ளிட்ட நான்கு மீனவர்களுக்கு நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து , மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர் அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கும் போது புதிதாக மூன்று லட்சம் மதிப்பில் வாங்கிய வலையில் 200 கிலோ வலை, ஜிபிஎஸ் வாக்கி டாக்கி உள்ளிட்டவைகளை கத்தியால் தாக்கி கொள்ளையடித்து சென்றதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்
மேலும் இந்திய கடல் எல்லையில் அச்சமின்றி மீன்பிடி தொழில் செய்ய அரசுகள் நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தமிழக மீனவ கிராமங்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours