தொடர் மழை காரணமாக மதுரை, திண்டுக்கல், கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழையானது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
தற்போது தொடர் கனமழை காரணமாக மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆகியோர் தொடர் மழை காரணமாக அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஏற்கனவே வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும், முல்லைப் பெரியார் அணையில் இருந்து நீர் திறந்து விட்டதன் காரணமாகவும் வைகை அணை அதன் முழு கொள்ளளவை வேகமாக எட்டி வருகிறது.
இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள வைகை கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours