கலைஞர் மகளிர் உரிமை திட்டம் – 8 தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் உள்பட 109  பணியிடங்கள்!

Spread the love

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக 8 தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் உள்பட 109  பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அமலாக்கத்துக்காக 8 தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்கள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 8 சிறப்பு தாசில்தார், 101 துணை தாசில்தார் பணியிடங்கஙள் என 109 புதிய இடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.

திமுக அரசு 2021 தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2023ம் ஆண்டு  செப். 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி  வைத்தது. தமிழக அரசின் கலைஞா் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில்,  முதல்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிர் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களில் சுமார் 11 லட்சம் போ் மேல்முறையீடு செய்திருந்தனா். அவா்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் போ் தகுதியானவா்களாகக் கண்டறியப்பட்டு அவா்களுக்கும் நவம்பா் மாதம் முதல் மகளிா் உரிமைத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தாண்டில் புதிதாக உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தாசில்தார் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours