காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர்!

Spread the love

திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில்உடனடி நடவடிக்கைமேற்கொள்ளாத காவல்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு நேற்றுஅடையாளம் தெரியாத நபர்களால் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டார்இதில் நெஞ்சுகைகளில் படுகாயம் அடைந்து தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறதுஅறுவை சிகிச்சை முடிந்து தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர்இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,” முதலமைச்சர் மு..ஸ்டாலின்தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு அடையாளம் தெரியாதநபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினார்ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சிமிகவும் கண்டனத்திற்குரியதுஇந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதின் மீது உரியநடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கஉத்தரவிடப்பட்டுள்ளதுமேலும் இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி மருத்துவ சிகிச்சையில் உள்ளசெய்தியாளருக்கு பத்திரிகையாளர் நல வாரியத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர்உத்தரவிட்டுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours