பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட்டில் காலனி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன் பின் உரையாற்றிய அவர், சரியாக ஓராண்டு காலத்தில் திறப்பு விழாவில் பேசுவில் எனக்கு மகிழ்ச்சி.
தோல் மற்றும் காலனி துறையில் இந்த அரசு பொறுப்பேற்றபின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதுபோன்ற வளர்ச்சியை பார்க்கும் போது, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொளாதார மாநிலம் என்கின்ற பெயரை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.
இந்த துறையில், இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து விட வேண்டும் என்ற உந்துதலில் காரணமாக நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு அதிகமாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
வரும் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பாகவே பல நிறுவனங்களின் துவக்க விழாவை நான் சமீபத்தில் மேற்கொண்டுள்ளேன். முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours