தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் காலை 8 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 900 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மாலையில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணை நிலவரம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 21 கனஅடியாக இருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் 7.80 மி.மீ. மழை பெய்தது. இதனால் அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 33 கனஅடியாக அதிகரித்தது.
எனினும், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 51.22 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 51 அடியாக குறைந்தது. 18.58 டிஎம்சியாக இருந்த நீர்இருப்பு, 18.44 டிஎம்சியாக சரிந்தது.
+ There are no comments
Add yours