கிளாம்பாக்கம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்!

Spread the love

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படும் எனதமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்அப்போது பேருந்துகள் இயக்கம்பேருந்து காலஅட்டவணைஓட்டுநர் மற்றும் நடத்துநரின் வருகை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பயணிகளிடம் பேசிய போதுகிளாம்பாக்கத்தில் இருந்து சேலத்திற்கு செல்வதற்குகோயம்பேட்டில்இருந்து வசூலிக்கப்பட்ட அதே தொகையை வசூலிக்கப்படுவதாகவும்அதனை குறைக்குமாறும் கோரிக்கைவிடுத்தனர்இதற்கு பதிலளித்த அமைச்சர்ஏற்கெனவே பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது எனதெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ”கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டபிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்அப்போதேநானும் அமைச்சர் சேகர்பாபுவும் சில கருத்துக்களை எடுத்துரைத்தோம்அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டநிலையில் பெரிய பிரச்சினைகள் எல்லாம் சரிசெய்து விட்டோம்குறைகளை யார் சொன்னாலும் சரி செய்வோம்கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுமதுராந்தகம் அருகேஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்துகள் காலதாமதமாக வந்த காரணத்தினால் மக்கள் கோபப்பட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர்.” என்றார்.

மேலும், “அட்டவணைப்படி பேருந்துகள் இயங்கி வருகிறது. 12 மணிக்கு பிறகு பேருந்துகளை இயக்க வேண்டும்என கோரிக்கை வைக்கின்றனர்பேருந்துகளை பக்கத்தில் உள்ள பணிமனைகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்அந்த நேரத்தில் ஓட்டுநர்நடத்துநர் எங்கிருந்து வருவார்கள்?. அதிகாலை நேரத்தில் பயணம் செய்வது ஆபத்தானதுஎன்பதால் அந்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லைபயணிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். 12 மணிக்கு மேல் பொதுவாக பேருந்துகள் மிக குறைவாகவே இயக்கப்பட்டு வருகிறதுஇது பல ஆண்டு காலமாகஇருந்து வரும் நடைமுறைஎனவே இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போதைக்கு 80% பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20% பேருந்துகள் மாதவரம்பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகிறதுகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 740 அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில்நாளை முதல் கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதுஅதேபோன்று ஏற்கனவே 361 அதிவிரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறதுஇதன் மூலம் கிளாம்பாக்கம்பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 1,221 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதுகிளாம்பாக்கம் பேருந்து நிலையம்குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours