குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

Spread the love

குரூப்-2 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்த நிலையில், 161 பணியிடங்களுக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.

இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின. குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகியான. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2-ம் தேதி வெளியிட்டது.

மேலும் குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.12 முதல் பிப்.17ம் தேதி வரை நடைபெறும். இதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மொத்தம் 161 பணியிடங்களுக்கான குரூப்-2 நேர்முகத் தேர்வு மதிப்பெண்களை டி.என்.பிஎஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கான முடிவுகள்‌ தேர்வாணைய வலைதளத்தில்‌ இருவழித்‌ தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேர்காணல் பதவிகளுக்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நேர்காணல் அல்லாத பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகவில்லை, இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours