கைக்கூப்பி பதில் தராமல் சென்ற தமிழிசை…!

Spread the love

புதுச்சேரியில் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் இன்று நடைபெற்றது.

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை வளாகத்தில் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை புது பானையில் பால் மற்றும் அரிசி இட்டு பொங்கல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மானாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் கரகாட்டம், பரதநாட்டியம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, “நான் பேசுவதைக் கேட்டால் சந்தோசம். புதுச்சேரி வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபடுவோம். அனைத்தும் செய்கிறோம்.

அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். புதுச்சேரியை முன்னேற்றுவதில் வளர்ச்சி பொங்கலாக இருக்கும் என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், “பொங்கல் நல்ல வாழ்க்கையை மகிழ்ச்சி, ஆரோக்கியத்தைத் தர வேண்டுகிறேன்.

கரோனா காலங்களில் இதுபோல் கொண்டாட முடியவில்லை. எந்த நிகழ்வாக இருந்தாலும் ஓரிரு கிராமிய கலை நிகழ்வுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அது கிராமிய கலைஞர்களை ஊக்கப்படுத்தும் திருமணங்களிலும் அவர்களை அழைத்து நிகழ்ச்சியை நடத்தலாம். இது அவர்களுக்கு புதிய உந்துதலை அளிக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி (துணை முதல்வர்) போகிறாரே?’ என்ற செய்தியாளர் கேள்விக்கு,கைக்கூப்பி பதில் தராமல் புறப்பட்டுச் சென்றார்

புதுச்சேரி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார்,

லட்சுமி நாராயணன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள். பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours