திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ஜகராக பணியாற்ற்றும் ஜெய ஆனந்த் என்கிற கர்ணன் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கோவில் குறித்த அவதூறான கருத்துக்களை பரப்பி வந்ததால் அவர் மீது இந்து சமய அற நலத்துறை நடவடிக்கை எடுத்தது. கடந்த மாதம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரத்தில் அடிவாரத்தில் உள்ள பழமையா கருங்கற்களை எடுத்துவிட்டு டைல்ஸ் கற்களை பதிக்கிறார்கள்’ என பதிவிட்டு இருந்தார்.
இந்த காரணத்துக்காக இந்து சமய அற நலத்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை இடைக்கால பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில், இந்த நடவடிக்கை ரத்து செய்யவேண்டும் என கூறி கர்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்து இருந்தார்.
இந்த விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் குறிப்பாக கோவில் என்பது அரசியல் செய்யும் இடம் இல்லை. கோவிலை பற்றி இப்படியான கருத்துக்களை பதிவிடுவது மிகவும் தவறு.
அந்த கோவிலில் வேலைசெய்துவிட்டு கோவிலை பற்றி இப்படி பதிவிட்டால் மக்களின் மனதில் தவறான எண்ணங்கள் உண்டாக்கும். கோவில் ஊழியராக இருந்துவிட்டு இப்படி கோவிலுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டது ஒரு போதும் மன்னிக்க முடியாது எனவும், இந்து சமய அற நலத்துறைஇன் இடைக்கால பனி நீக்கதிற்கு தடை நீக்க மறுத்து இந்த மனு குறித்து இந்து சமய அற நலத்துறை விரிவான விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் கூறி வழக்கை நீதிபதி புகழேந்தி ஒத்திவைத்தார்.
+ There are no comments
Add yours