பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி கோயம்புத்தூரில் நடைபெறும் சாலை வாகனப் பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக, கோயம்புத்தூர் மாநகர பகுதியில் உள்ள கவுண்டம்பாளையம் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பாஜக சார்பில் பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்சிக்கொடிகள் நடப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பணியாளர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகர காவல் துறையோடு இணைந்து மத்திய பாதுகாப்பு குழுவினரும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலை 5.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர், 5.45 மணிக்கு கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து வாகனப் பேரணியை துவக்குகிறார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த பேரணி ஆர் எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. இரவு கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கும் பிரதமர், செவ்வாய்க்கிழமை காலை கேரளம் புறப்படுகிறார்.
+ There are no comments
Add yours