ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு நாளை அக். 12 முதல் 15 முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதித்துள்ளது.
இதனை முன்னிட்டு தினமும் காலை 6:00மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்லவோ, இரவில் மலையில் தங்கவோ அனுமதி கிடையாது.
சுவாமி தரிசனம் செய்தவுடன் அடிவாரம் திரும்ப வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours