சனாதன ஒழிப்பு பற்றி பேசிய தமிழக அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 2ஆம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில், சனாதன ஒழிப்பு மாநாடு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சேகர்பாபு, திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியா போல சனாதானம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்து இந்தியா முழுக்க பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. நீதிமன்ற வழக்குகள், காவலத்துறையில் புகார்கள் என அமைச்சர் உதயநிதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன.
இந்த மாநாடு மற்றும் அமைச்சர் உதயநிதியின் பேச்சு தொடர்பாக, திராவிட இயக்கங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை திருவேற்காட்டை சேர்ந்த ஒரு நபர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை செய்தார். அப்போது, சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அந்த ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
மேலும், சனாதன ஒழிப்பு பற்றி அமைச்சர்கள் பேசிய விவகாரத்தில் காவல்துறை தங்கள் கடமையை புறக்கணித்து விட்டனர். எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கூறினார்.
அடுத்து , ஒரு கொள்கைக்கு எதிராக பேசுவதை விடுத்து, போதை, மதுவுக்கு எதிராக பேச வேண்டும் என்று கூறி, இந்த மனுவுக்கு அனுமதி அளிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
+ There are no comments
Add yours