இந்துக்களாக பிறந்தால் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே தான் வைத்திருக்க வேண்டுமா? என்று நடிகை ரேவதி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரசேத மாநிலம் அயோத்தியில் 1800 கோடி பொருள் செலவில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
அந்த கோவிலின் முதற்கட்ட கட்டிடப்பணி நிறைவடைந்த நிலையில், அதன் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22-ம் தேதி விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், திரைப் பிரபலங்கள் என விவிஐப்பிகள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து ராமர் கோவிலினுள் ராமர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தன் கைகளாலேயே பிரதிஷ்டை செய்தார்.
மறுபுறம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதற்கு ஒருதரப்பினர், பாஜக அரசுக்கு பாராட்டு தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் வேறு தரப்பு மக்கள், இப்படி பாராட்டுபவர்களை ‘சங்கி’ என்று முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், இந்துக்களாக பிறந்தால் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே தான் வைத்திருக்க வேண்டுமா? என்று நடிகை ரேவதி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்..நேற்று ஒரு மறக்க முடியாத நாள். நானா இப்படி.. ராமரின் முகத்தை பார்த்ததும் வந்த உணர்வு அப்படி இருந்தது.
எனக்குள் உணர்வுகள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. விசித்ரமான விஷயம் என்னவென்றால் ஹிந்துக்களாக இருக்கும் நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம்.
அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம்.
மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மீக நம்பிக்கைகளை பர்சனலாக வைத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது.
ஸ்ரீ ராமரின் வருகை இந்த விஷயத்தை பலரிடம் மாற்றி இருக்கிறது. நாம் ராமரின் பக்தர்கள் என முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம். ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் தொடர்பான இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இத்தனை நாள் உங்களை யார் தடுத்தது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours