செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பத்துக்கு மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் செங்கல்பட்டு காவல் நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளின் பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.
தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டியை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதாலும் ரயில் போக்குவரத்து குறைவு என்பதல் ரயில் சேவை பெரிதளவு பாதிப்பு ஏற்படவில்லை.
இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்படும்.
+ There are no comments
Add yours