கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஐந்து தொகுதிகளில் பாஜக வேட்பாளருக்கு எதிராகவலுவான வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று அதிமுகவிடம் பாஜக டீல் பேசி வருவதாக பரபரப்பானதகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் தங்களை விட்டு பிரிந்து சென்ற அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் சேர்க்க பாஜக மேலிடம் வெகுதீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு சற்றும் சம்மதிக்கவில்லை. இந்தநிலையில் அதிமுக தனி அணி அமைத்து தேர்தலை சந்திக்க களமிறங்கியுள்ளது.
அதேபோல பாஜகவும் கடந்தமுறை தங்கள் கூட்டணியில் இருந்த சிறு,சிறு கட்சிகளை ஒன்றிணைத்து தனி அணியாக கட்டமைத்து வருகிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் அதிமுகவை கூட்டணிக்குள் இழுக்க அமித்ஷா உள்ளிட்டவர்கள் வெளிப்படையாகவே செயலாற்றினார்கள்.
இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பிக்களை பெற வேண்டும் என்பதே பாஜகவின் தற்போதையஇலக்கு. அதற்காக பிரதமர் மோடியே ஒரு மாதத்தில் நான்கு pமுறைக்குமேல் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்துவிட்டுசென்றிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி இருந்தால் ஐந்து இடங்கள் வரை தங்கள் கட்சிக்கு கிடைக்கும் என்றுபாஜக கணக்கு போட்டு வைத்திருந்தது.
கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளதால் அந்த ஐந்து இடங்களை எப்படியாவது தமிழ்நாட்டில் இருந்து பெற்று விடவேண்டும் என்று பாஜக திட்டமிடுகிறது. ஆனால் அதற்கு அதிமுகவின் தயவு தேவை என்பதை பாஜக உணர்ந்துகொண்டுள்ளது. அதனால் அதிமுகவை சமாதானம் செய்ய கோவையை சேர்ந்த ஆன்மீக குரு ஒருவர் மூலமாகபேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரண்டு கட்சிக்கும் நெருக்கமாக இருக்கும் அந்த குரு மூலம் மீண்டும் அதிமுகவை பாஜகவிற்குள் இழுக்கும்பணிகள் நடந்து வந்தது. திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை என்றுகூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில், கடைசி முயற்சியாக இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் மூலம் முடக்குவோம் என்கிறஅஸ்திரத்தை வீசிப் பார்த்தது பாஜக. ஆனாலும் எடப்பாடி அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில், தற்போதுஅடுத்ததாக வேறு வழியை பாஜக மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக பலமாக இருக்கும் ஐந்து தொகுதிகளில் முக்கியமான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அந்ததொகுதிகளுக்கு அதிமுக சார்பில் பலம் இல்லாத சாதாரண வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதுதான்பாஜகவின் அந்த திட்டம். அந்த ஐந்து தொகுதிகள் எது என்பதை தெரியப்படுத்தப்படும். அந்த தொகுதிகளில் பாஜகவெற்றி பெறுவதற்கு அதிமுக உதவ வேண்டும்.
வெற்றி பெறுவதற்குரிய சில வழிகளில் அதிமுக உதவ வேண்டும் என்கிற யோசனையை எடப்பாடியாரிடம் பாஜக முன்வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த டீல் ஒத்துவரும் பட்சத்தில் குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளில் அதிமுகசார்பில் வலுக்குறைந்த வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது
+ There are no comments
Add yours