சேலத்தில் இளைஞரணி மாநாட்டிற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது!

Spread the love

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது. இதற்காக மூன்று மாதங்களாக மைதானம் மற்றும் அரங்கம் அமைக்கும் பணி விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு தென் மாவட்டங்களில் அதிக அளவு இருந்ததால் மாநாட்டு பணிகள் மற்றும் மாநாடு நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு திட்டமிட்டபடி நாளை மாநாடு நடைபெற உள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் இந்த மாநாட்டில், அமைச்சர்கள், சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. நாளை மாலை முதலமைச்சர் ஸ்டாலின் மாநாட்டில் பேசுகிறார். இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பேசுகின்றனர்.

இதனை ஒட்டி மாநாட்டிற்கான நிகழ்ச்சிகள் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய அமைச்சர் டி ஆர் பாலு, ராஜா, அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாலை 1500 ட்ரோன் ஷோ நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

தமிழக முதலமைச்சர் குடும்பத்தோடு பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் தாரை தப்பட்டை, கரகாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும், மாநாடு குறித்து விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணியும் அவர் வரவேற்றார். மாநாட்டு பந்தலில் சுமார் 2 லட்சம் பேரும், வெளிப்புறத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கையில் போடப்பட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆங்காங்கே தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்களின் வசதிக்காக பிரமாண்ட எல்இடியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு என பிரம்மாண்ட உணவகம் ஏற்படுத்தப்பட்டு அறுசுவை விருந்து அளிக்கவும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த திமுகவின் மாநில இளைஞரணி மாநாடு திமுகவிற்க்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெற உள்ள மாநாட்டில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்பார் என்பதால் சேலம் ஆத்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours