ஜனவரியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Spread the love

தமிழகத்தில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஜனவரி 7-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வில் பங்கேற்க வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை https://www.trb.tn.gov.in/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். மேலும், ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ் – 394, ஆங்கிலம் – 252, கணிதம் – 233, இயற்பியல் – 292, வேதியியல் – 290, தாவரவியல் – 131, விலங்கியல் – 132, வரலாறு – 391 மற்றும் புவியியல் – 106 என தமிழகத்தில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி 7-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெற உள்ளது.

இதனிடையே, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில், ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. டெட் தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையை பரிசீலித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours