ஜன.12-ம் தேதி செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு!

Spread the love

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் 14 அன்று கைது செய்தனர். இந்த வழக்கில் 3-வது முறையாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று நடைபெற்றது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் ஆஜராகி, “இந்த வழக்கின் ஆவணங்கள்அனைத்தும் வழக்கின் விசாரணைக்கு ஏற்ப திருத்தப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்த உண்மை தொகைகளை திருத்தி பொய்யாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 180 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில்இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ்ஆகியோர், “கடந்த 2016-17-ம் ஆண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய்டெபாசிட் ஆகியுள்ளது.

செந்தில் பாலாஜியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் யார், யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், முகவரிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் உள்ளன. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தற்போது வரைதலைமறைவாக உள்ளார்.

எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” எனவாதிட்டனர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இந்த வழக்கில் வரும் ஜன.12 அன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி அறிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours