அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிசம்பர் 26ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகளில் இபிஎஸ் தொடர் வெற்றி கண்டு வரும் நிலையில், ஒற்றைத்தலைமையாக எந்த விதமான இடர்பாடுகளும் இல்லாத நிலையில் இந்த கூட்டத்திற்கு எடப்பாடியார் அழைப்பு விடுத்துள்ளார்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’கட்சி விதிகளின் படி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 26ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியை அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். அனைவரும் அழைப்பிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours