தண்டவாள விரிசல் : ஓட்டுனரின் சாமார்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

Spread the love

சென்னை திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் தாமதமாக சென்றன. இதனால் குறித்த நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் பயணிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரையை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்த ஓட்டுநர், அது குறித்து தாம்பரம் ரயில்வே அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் தண்டவாளத்தை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளுக்கு செல்ல கூடிய ரயில்கள் தாமதமாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AC
ஒரு மணி நேர பணிகளுக்குப் பின் தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முன்னதாக ரயில் தாமதமானதால் குறித்த நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். இதன் காரணமாக மெட்ரோவில் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை ரயில் ஓட்டுநர் பார்த்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பயணிகள் கூறினர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours