நான் முதலவன் போட்டித் தேர்வுப் பிரிவுயூ பி எஸ் சி முதல்நிலை தேர்வுகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா,தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,சார்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது,
இளைஞன் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நான் முதல்வன் முதல் நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் மதிப்பீட்டு தேர்வு மூலம் தமிழகத்தை சேர்ந்த 50000 மாணவர்கள் யூ பி எஸ் சி போட்டித் தேர்வு எழுதினர் அதில் தகுதியான ஆயிரம் மாணவர்களை தேர்ந்தெடுத்து யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 7,500 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கலைஞர் அவர்கள் பல குடும்பங்களில் முதல் பட்டதாரிகளை உருவாக்கினார், அந்த பட்டதாரிகளுக்கு அரசு துறையினோ அல்லது தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் ஏற்பாடு செய்திருந்தார், கல்வியாக இருந்தாலும் மேளையாக இருந்தாலும் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் தான் திராவிட இயக்கத்தின் நோக்கம்,
அதற்காக தான் பெரியார் அண்ணா முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்கள் யாரும் பாடுபட்டார்கள் அந்த வழியில் தான் முதலமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள், இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத் திறனை வளர்க்கவும் அதன் மூலமாக நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழிகாட்டி ஆக வழங்குவதற்கு மிக முக்கியமான திட்டம் நான் முதல்வன் திட்டம்,
இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத இந்த திட்டம் தமிழகத்தில் ஒளியேற்றி வைக்கின்ற ஒரு மகத்தான திட்டமாகும், இந்த திட்டம் துவங்கி உரையாண்டில் 13 லட்சம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தனியார் துறையில் மட்டுமல்லாமல் அரசுத் துறையிலும் வேலை வாய்ப்பு தர வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுவருவது தான் நாம் முதல்வர் திட்டம்,
ஒன்றிய அரசு நடத்தப்படும் யுபிஎஸ்சி ஆர்ஆர்பி, பேக்கிங் சர்வீஸ் உள்ளிட்ட போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் நடத்தப்படுகிறது.
தேசிய கல்வி நிறுவனத்தில் தர நிர்ணய பட்டியலில் 100 கல்வி நிறுவனங்களில் முதல் 18 இடங்களில் தமிழகம் தான் இருக்கிறது, இருந்தாலும் யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெறுவது மிக குறைவாக இருக்கிறது, இது மிக அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது,
ஏற்கனவே 10 சதவீதம் மாணவர்கள் இருந்த நிலையில் இப்போது ஐந்து சதவிகிதமாக குறைந்துள்ளது இதேபோன்று தொடர்ந்தால் தமிழகத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் யுபிஎஸ்சி போன்ற தேர்வில் ஒன்றியத்தில் மாநிலத்திலும் அரசு பதவியில் தமிழக இல்லாமல் போய்விடும், இந்த நிலைமையை போக்க தான் நான் முதலில் திட்டத்தில் போட்டி தேர்வு வைத்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒரு கோடி ரூபாய் நிதியில் நம் முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் 1,000 மாணவர்கள் மதிப்பீட்டில் தேர்வு அடிப்படையில் யுபிஎஸ்சி தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாணவர்களுக்கு 7500 10 மாதம் ஊகத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஊக்கத்தொகையானது படிக்க மாணவர்களுக்கு உள்ள பொருளாதார சுமையை நீக்கும் எந்தவிதமான கவலையும் இல்லாமல் மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்தியாவின் வளர்ச்சி மாநிலங்களில் தான் உள்ளது அப்படி மாநிலங்கள் வளர்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் அதிகாரிகளாக உருவாக்கி எதிர்காலம் உங்கள் கையிலே உள்ளது, சொந்த மாநிலப் பணியில் அந்த அதிகாரிகள் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வர வேண்டும், சொந்த மாநிலத்தில் அதிகாரியாக இருந்து பணியாற்றும்போது தங்கள் மாநிலத்தை உயர்த்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும், அதை கருத்தில் கொண்டு தான் இந்த திட்டத்தை மாநில முதலமைச்சர் அவர்கள் துவங்கி இருக்கிறார், பயன்படுத்தி நீங்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்,
+ There are no comments
Add yours