தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில் தொடங்கியது இலவச சிறப்பு மருத்துவ முகாம்!

Spread the love

வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் சற்றுமுன் தொடங்கியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகள் இருப்போர் இந்த முகாமிற்கு சென்று பயன்பெறலாம்.

ஏற்கனவே, டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 1-ஆம் தேதி 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1000 இடங்களில் 1000 இலவச சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இன்று முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை 10 ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மழைக்கால நோய்கள் குறித்த பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்கப்படும். தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு தனி வார்டு செயல்பட்டு வருகிறது. மருத்துவர்களை அணுகாமல் வீட்டிலேயே மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, இந்த ஆண்டில் 3.93 லட்சம் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

மேலும், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 10,000 மருத்துவ முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல் முறை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours