தவறான விமர்சனங்கள் – வானிலை மையம் விளக்கம்!

Spread the love

சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது

இந்திய வானிலை துறையில் இருக்கும் அதிவேக கணினிகள், ரேடார்கள், செயற்கைக்கோள் வசதிகள் உலகத்தரத்திற்கு ஒப்பானது

சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன

சென்னை வானிலையை கண்காணிக்க 2 டாப்ளர் ரேடார்களும், தென் தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன

இதில் X band வகை ரேடார் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும்

இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை மையத்தில் பணியாற்றுகிறார்கள்

இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு, முன்னெச்சரிக்கைகளை உலக வானிலை அமைப்பு பாராட்டியுள்ளது

வர்தா, கஜா, மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மைய எச்சரிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது

சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாக உள்ளது – வானிலை மையம்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours