தூத்துக்குடியில் குளத்தில் மூழ்கி 2 பெண்கள் உயிரிழப்பு!

Spread the love

தூத்துக்குடி அருகே மேலமருதூர் கிராமத்தில் உள்ள குளத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் ஏராளமானவர்கள் இந்த குளத்தில் குளிப்பதற்காக செல்கின்றனர். இந்நிலையில் மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி மேனகா, அவரது தோழிகளான கலைச்செல்வி மற்றும் கனிச்செல்வி ஆகியோர் குளத்திற்கு குளிக்கச் சென்றனர்.

குளத்தில் குளித்து கொண்டிருந்த போது மாணவி மேனகா குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதை பார்த்த கலைச்செல்வி மற்றும் கனிச்செல்வி ஆகியோர் அவரை மீட்க போராடியுள்ளனர். ஆனால் மூவருக்கு நீச்சல் தெரியாததால் மாணவி மேனகாவும், கலைச்செல்வியும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பெண்களின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கல்லூரி மாணவி கனிச்செல்வியை போராடி பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து, கனிச்செல்வி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் 2 பெண்கள் அடுத்தடுத்து குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours