“கடந்த 30 மணிநேரத்தில் காயல்பட்டினம் பகுதியில் 116 செமீ மழை பதிவாகி உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கிய 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தென்மாவட்ட பெருமழை பாதிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 30,000 லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி, நெல்லையில் முழுமையாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்விநியோகம் சரியாக உள்ளது. 48 மின்மாற்றி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மீட்புபடையினர் போதுமான அளவிற்கு உள்ளனர். 323 படகுகள் கூடுதலாக செயல்படுத்தி உள்ளோம்” என்றார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு. தென்மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது.
வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்
தொடர்ந்து, தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பை வானிலை ஆய்வு மையம் சரியாக கணிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
+ There are no comments
Add yours