கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து முனையம் மாறிய நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையங்களுள் ஒன்றான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளது. ன்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் கட்டப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள CMBT நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ₹20 முதல் ₹35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ₹460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ₹430 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours