கோவையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் இருவர், தேவாலயத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு தேவாலயத்தில் பாதிரியார்களாக இருந்தவர்கள் சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ். இவர்கள் இருவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேவாலய நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ் ஆகிய இருவரும் தேவாலய பிரார்த்தனை அரங்கிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த கதவுகள், சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்து தேவாலய நிர்வாகம் தரப்பில் ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார், பணிநீக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிரியார்களே தேவாலயத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours