நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று பழனி மலை அடிவாரத்தில் கடையடைப்பு!

Spread the love

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி வர்த்தகர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் பழனி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று பழனி மலை அடிவாரத்தில் கடையடைப்பு போராட்டத்தை வியாபாரிகள் நடத்த்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவார பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி திருத்தொண்டர் பேரவை ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் அதனை கண்காணிக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்றை நீதிமன்றம் அமைத்திருந்தது.

அந்த குழுவின் வழிகாட்டுதலோடு பழனி மலை அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடிவாரம் பகுதியில் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் விதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாகவும், இதனால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் கூறி அடிவாரம் மற்றும் சன்னதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக அடிவாரம் வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளது.

கடந்த 15 நாட்களாக அடிவாரம் பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பக்தர்கள் நலன் கருதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரப்படுகின்றன. இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அடிவாரம் வர்த்தக சங்கத்தினர் மற்றும் வர்த்தகர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டனர். இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பேரில் தினசரி வர்த்தகர்களை சிரமப்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து எந்த ஒரு தடையுமின்றி வர்த்தகம் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours