நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறும் தேர்தலில், திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் நாமக்கல்லில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பணிமனையைதிறந்து வைத்து மாநில வனத்துறை அமைச்சரும் திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலத் துணைத்தலைவருமான டாக்டர். மா. மதிவேந்தன் பேச்சு
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் I.N.D.I.A. கூட்டணி திமுக தேர்தல் தலைமை அலுவலகத்தை நாமக்கல்சேலம் சாலையில் திமுக வின் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைத் தலைவரும் மாநில வனத்துறைஅமைச்சருமான டாக்டர் மா. மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் K.R.N. இராஜேஷ்குமார், A.K.P. சின்ராஜ்ஆகியோர் I.N.D.I.A. கூட்டணித் தலைவர்களோடு இணைந்து திறந்து வைத்தனர்.
இதில், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்றஉறுப்பினருமான E.R. ஈஸ்வரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நாமக்கல் தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின்
வேட்பாளர் V.S. மாதேஸ்வரனை கூட்டணி கட்சியினர் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தனர்.
இதில் இந்தியா கூட்டணியின் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர். மா. மதிவேந்தன், திமுக அரசின்சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி இந்தியா கூட்டணியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த அரசு பலன் பட்டியலின மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டுசட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் மன திட்டங்கள்செயல்படுத்தப்படுகிறது. இது போன்ற மக்கள் நலத்திட்டங்களையும் அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகளையும்மேற்கொண்டுள்ள நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களிடம் எடுத்து கூறி இந்த நாடாளுமன்ற தேர்தலில்இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் திமுகவின்ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைத்தலைவரும் வனத்துறை அமைச்சருமான டாக்டர். மா. மதிவேந்தன்கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள்பலரும் கலந்துகொண்டனர்.
+ There are no comments
Add yours