வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக காரணங்களுக்காக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.
கனமழை எதிரொலியையடுத்து, 4927 பாதுகாப்பு நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 350 மீட்புப்படை வீரர்கள் 15 குழுக்களாக உள்ளனர். தேசிய பேரிடர் குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours