தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகிறது.
அந்த வகையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவை 200 கன அடியில் இருந்து, 1,000 அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வரும் நிலையில் 24 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 22.35 அடி நிரம்பி உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்துவிடப்பட உள்ளது. இதனையடுத்து சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை,அடையாறு உள்ளிட்ட பகுதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours