ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி ஆஜராகாததால், வரும் 29-ம் தேதிக்கு தீர்ப்பை தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி, தவறான வழிக்குஅழைத்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக 2018-ல் நிர்மலாதேவியை கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை, அப்போதைய ஆளுநர்பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ஏப். 30-ம்தேதிக்குள் விசாரித்து, தீர்ப்பு வழங்குமாறு சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 4-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏப். 26-ம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தபோது பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர்.
ஆனால், நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதையடுத்து, தீர்ப்பைவரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.
+ There are no comments
Add yours