‘நிலம் ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டிய இபிஎஸ்’ -அமைச்சர் மா.சுப்ரமணியன்!

Spread the love

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டியிருந்தால்முதல் குற்றவாளி எடப்பாடிபழனிசாமி தான் என புதுச்சேரியில் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டியுள்ளார்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டதுஇதனையொட்டிவெங்கடசுப்பா ரெட்டியார் சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்அவரை தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்அரசுகொறடா .கே.டி.ஆறுமுகம்சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்அவர்களை தொடர்ந்து பல்வேறு கட்சியினர்மீனவ அமைப்புகள் சிங்காரவேலர் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி திமுக சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்இதன் பிறகுசெய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாசுப்ரமணியன், ”புதுச்சேரியை பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சுமிட்டாய்விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுவண்ண நிறத்தில் உள்ள பஞ்சுமிட்டாய்க்கு மட்டுமே தடைவிதிக்கப்படுகிறதுவெண்மை நிறத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடை இல்லை.” என்றார்.

மேலும், ”மதுரை எய்ம்ஸ் கல்லூரி விவகாரத்தில்தூங்கும் நபர்களை எழுப்பி விடலாம் தூங்குவது போல் நடிக்கும்நபர்களை எழுப்ப முடியாதுமதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டுமானத்தில் ஏன் காலதாமதம் ஆகிறது? 2019 பிரதமர்மோடி அடிக்கல் நாட்டினார்அப்போது பிரதமரை அழைத்து வந்தது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி.

நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல் யாருக்கோ சொந்தமான ஒரு இடத்தில் மருத்துவ கல்லூரி கட்ட எப்படி அடிக்கல்நாட்டப்பட்டதுயாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்ட ஒரு மாநில முதலமைச்சர்எப்படி பிரதமரைஅழைத்து வந்தார்நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல் வேறு ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அடிக்கல்நாட்டியிருந்தால்அதில் முதல் குற்றவாளி பழனிசாமி தான்அது தெரியாமல் பிரதமர் அடிக்கல் இருந்தால் அவரும்குற்றவாளி தான்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”2020ம் ஆண்டு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதுஅதன் அடிப்படையில் இதற்கானஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு, 2023ல் நில ஆர்ஜிதம் செய்யப்படாமல் இருப்பதால்தான் எய்ம்ஸ் கல்லூரிகாலதாமதம் என்று நிதி அமைச்சர் கூறுவது பொறுப்பற்றதுஇந்தியாவில் உள்ள மற்ற எய்ம்ஸ் கல்லூரிக்கு எல்லாம்நிதி ஆதாரம் கொடுக்கும் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள கல்லூரிக்கு மட்டும் நிதி தர மறுக்கிறதுஎன்ன காரணம்என்று தெரியவில்லை“ என்று தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours