மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், புயல் மீட்பு பணிகளுக்காக விஜயவாடாவில் இருந்து 5 குழுக்களை சேர்ந்த 125 வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். அதன்படி, விஜயவாடாவில் வந்துள்ள 2 குழுக்கள் வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணையில் மீட்பு பணிக்கு விரைந்துள்ளது.
மீதமுள்ள 3 குழுக்கள் சென்னையின் மற்ற பகுதிகளில் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கூடுதலாக 5 குழுக்கள் வந்துள்ளது. இதனிடையே, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 25 பேர் கொண்ட 19 NDRF குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், சென்னையில் முழுமையான இயல்பு நிலையில் விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த சூழலில், சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 004-23452360, 004-23452361, 004-23452377 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் அழுகிய 4 மாவட்டங்களில் நடமாடும் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 300 நடமாடும் மருத்துவ சிறப்பு முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours