கொக்கிரகுளம் பகுதியில் இருக்கும் பாலங்களை உரசியபடி பாய்ந்து செல்லும் தாமிரபரணியாறு | படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் ஞாயிறு காலை 8.30 மணி முதல் திங்கள்கிழமை காலை 6.30 மணிவரையிலான நேரத்தில் அதிகபட்சமாக 615 மி.மீ. மழை பதிவாகியிருந்து.
மழைப்பதிவு விவரம்: மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் இந்நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 430.20, சேரன்மகாதேவி- 412.40, மணிமுத்தாறு- 324.80, நாங்குநேரி- 333.20, பாளையங்கோட்டை- 442, பாபநாசம்- 352, ராதாபுரம்- 278, திருநெல்வேலி- 310.40, சேர்வலாறு அணை- 276, கன்னடியன் அணைக்கட்டு- 406, களக்காடு- 322.20, கொடுமுடியாறு- 304, நம்பியாறு- 357.
அணைகளின் நீர்மட்டம் உயர்வு: 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிநிலவரப்படி 133.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையிலிருந்து 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு நீர்மட்டம் 142.75 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 108.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 25803 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
49.20 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணையும், 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணையும் நிரம்பி மறுகால் பாய்கின்றன. வடக்கு பச்சையாறு அணைக்கு வரும் 1049 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதுபோல் நம்பியாறு அணைக்கு வரும் 2064 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்துவிடப்படுகிறது. 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 430 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
+ There are no comments
Add yours