தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மாலத்தீவு கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் கேரளம் ஓட்டிய தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்தது இருந்தது
அதன்படி, இன்று அதிகாலை முதலே திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து, அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (9.12.2023) விடுமுறை என அறிவித்துள்ளார். இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதே போல இன்று நீலகிரி , கோவை , திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் , சிவகங்கை, மதுரை, திருவாரூர் , மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையினால் தேங்கிய வெள்ள நீரை அகற்றும் பணி முழுதாக முடியாததால் சென்னை மாவட்டம் முழுவதும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளிலும் கடந்த திங்கள் முதலே பள்ளி கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வருகிறது. திங்கள் கிழமை தான் அப்பகுதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours