பசும்பொன்னில் தொடங்கிய தேவர் ஜெயந்தி விழா: முதல்வர் ஸ்டாலின் வருகை எப்போது?

Spread the love

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி(thevar jayanthi) மற்றும் 61-வது குருபூஜை விழா இன்று தொடங்கி, வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ராமநாதபுர மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா இன்று தொடங்கியுள்ளது. முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள்அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் ஆன்மிக விழா:

முதல் நாளான இன்று தேவர் நினைவிடத்தில் கணபதி ஹோமம், லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

இரண்டாம் நாள் அரசியல் விழா:

லட்சார்ச்சனை பெருவிழா தொடர்ச்சி மற்றும் அரசியல் விழா கொண்டாடப்படுகிறது.

மூன்றாம் நாள்அரசு விழா:

மூன்றாம் நாள் காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால் தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரகடிஐஜி துரை ஆகியோர் தலைமையில் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours