மூணாறு தேவிகுளம் அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உலா வந்த “படையப்பா ” காட்டு யானையால் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பரிச்சயமானது “படையப்பா ” என்ற கொம்பன் காட்டு யானை.
உணவிற்காக மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வலம் வரும் “படையப்பா”, உணவு கிடைத்ததும் உண்டு விட்டு வனத்திற்குள் செல்வது வழக்கம்.
அந்த வகையில் மூணாறு தேவிகுளம் பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் முகாமிட்ட படையப்பா காட்டு யானை வீடுகளில் சமையலறையில் வைக்கப்பட்ட காய்கறிகளையும் தின்று தீர்த்தது.
இதையடுத்து குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருந்த தோட்டத்தில் புகுந்து பயிர்களையும் உண்டதோடு அவற்றை சேதப்படுத்தியது.
அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பியதால் அமைதியாக தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.
தொடர்ந்து நீண்ட நேரத்திற்க்கு பின் வனப்பகுதிகுள்ளாக கடந்து சென்றது.
உணவு தேடி ஊருக்குள் சர்வசாதரணமாக வந்து செல்லும் “படையப்பா” காட்டு யானை, இதுவரை பொதுமக்களை தொந்தரவு செய்யவில்லை என்றாலும், காட்டு யானையின் குணம் எந்நேரமும் மாறலாம் என்பதால் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.
“படையப்பா ” காட்டு யானையை நிரந்தரமாக வனப்பகுதிகுள் விரட்ட வேண்டும் என்பது அப்பொழுது மக்களின் ஆவலாய் உள்ளது.
+ There are no comments
Add yours