பதவியை ராஜினாமா செய்தார் தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் !

Spread the love

தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக சண்முகசுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசிடமும் முதலமைச்சரிடமும் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவிவிலகுவதாகவும், அரசு பொறுப்பில் இருந்து விலகி தனியாக வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாகவும் அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய ஏ.ஜி. நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

யார் இந்த ஆர். சண்முகசுந்தரம்?
1989 முதல் 1991 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவிவகித்தவர் இவர். மேலும், 2000ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

அதன் பின், 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவராக இருந்தவர் சண்முகசுந்தரம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிராக சொத்து குவிப்பு, ஊழல் மற்றும் குற்ற வழக்குகளை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் 2021 ஆம் ஆண்டு மே மாதம் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜினாமா முடிவை தமிழக முதல்வரிடம் கொடுத்தபோது, தற்போதய சூழலில் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டதால், தலைமை வழக்கறிஞராக பணியாற்றிவந்தார். ஆனால் தற்போது மீண்டும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். நேற்று இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் தகவல் தெரிவித்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா கடிதம் ஒப்படைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours