புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுள் கார்டு கிடைக்காமல் பல மாதங்களாக காத்திருக்கும் 2 லட்சம் பேர் புதிய அட்டை வழங்கப்படுமா, வழங்கப்படாதா என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் படி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டை மிகவும் அவசியமான ஒன்று. புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு உணவு வழங்கல் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து அட்டை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுப்பர். மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் என தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து புதிய ரேஷன் வேண்டி அநேகம் பேர் விண்ணப்பத்தனர். இதனையடுத்து கடந்த ஜுலையில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.தற்போது வரை 2 லட்சம் பேர் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் 80 ஆயிரம் பேருக்கு கார்டு வழங்க அனுமதி அளிக்கப்பட்டும் புதிய அட்டை விநியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து புதிய அட்டைகள் விண்ணப்பித்தவர்கள் கூறுகையில், “புதிய அட்டை விண்ணப்பித்து, ஓராண்டிற்கு மேலாகியும் அட்டை வரவில்லை. தகுதியான நபர்களை கண்டறிந்து, அட்டை வழங்கலாம். ஆனால் தற்போது வரை வழங்கப்படவில்லை. உணவு வழங்கல் உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு சென்று கேட்டால், புதிய அட்டை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளனர்.மேலும், “ புதிய அட்டைவிண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கப்படுமா அல்லது புதிய ரேஷன் அட்டை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதா என்பதை அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதனால், வீண் அலைச்சலும், பணம் விரயமும் தவிர்க்கப்படும்.” என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
+ There are no comments
Add yours