சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை ஆகிய இடங்களில் நாளை மாலை 7 மணி முதல் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து முறையில் மாற்றங்கள் செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள், 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours