கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை குறிக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது•
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகள் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு நாளை முதல் வரும் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு•
வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை மறுநாள் புயலாக வலுப்பெற்று சென்னைக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கு இடையே டிசம்பர் 4ம் தேதி மாலை கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது.
+ There are no comments
Add yours