தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு 2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொங்கல் பரிசுத்தொகுப்புகளுக்கான டோக்கன்கள் வழங்கும் பணி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நாள்தோறும் 150 முதல் 200 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற ஜனவரி 12ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரேசன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக ஜனவரி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
+ There are no comments
Add yours