சென்னையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மழை பாதிப்பை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் அதிகமான மழை பெய்தால் சற்று மழை நீர் தேங்கும். அவையெல்லாம் சரி செய்யப்பட்டு வருகிறது. மலையை கண்டு பயப்பதாக கூடாது. மழை நமக்கு தேவை. நமது நிலத்தடி நீரை மேம்படுத்த மழை மிகவும் தேவை.
காவிரி டெல்டா பகுதிகளில் மழை நீருக்காக ஏங்கி கொண்டிருக்கின்றனர். மழையை, மழைநீர் வடிகாலொடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. மழை பாதிப்பு குறித்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். நாளை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒருநாள் முன்னதாக இன்றே தொடங்கிவிட்டது எனவும், வடகிழக்கு பருவமழை வீரியம் தொடக்கத்தில் குறைந்து காணப்பட்டாலும், வரும் நாட்களில் வீரியம் அதிகரிக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours